உள்நாடு

ரயில் சேவைகளை மட்டுப்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  ரயில் பயணத்திற்கு தேவையான டீசல் மூன்று நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ரயில் சேவைகளை மட்டுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்பு குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளதால் எரிபொருள் பாவனையில் அவதானமாக இருக்குமாறு எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளரின் மேலதிக செயலாளர் சமிந்த ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

பிரதேச சமூர்த்தி சமுதாய சங்கத்தினால் கிராம சேவகருக்கான வரவேற்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு!

editor

மாகாண மட்டத்தில் CID அலுவலகங்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

நாம் குழப்பமடைய மாட்டோம் – அவசரப்படவும் மாட்டோம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor