உள்நாடு

ரயில் சேவை ஸ்தம்பிக்கும் நிலை

(UTV | கொழும்பு) –  எரிபொருள் பற்றாக்குறையால் நிலைய ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் இளநிலை ஊழியர்கள் பணியிடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

சில அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும், அனைத்து தரப்பினரின் அத்தியாவசிய சேவையான புகையிரதத்தை கவனத்தில் கொள்ளாதமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், ‘கொவிட்’ காலத்தில் இருந்தது போல் வாரத்திற்கு ஒருமுறை பணிக்கு அழைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

காற்றில் பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு

பஸ் வீதி வரைபடங்களை இணைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட புதிய முன்னோடித் திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது

வர்த்தக வலய ஊழியர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!