உள்நாடு

ரயிலில் மோதி ஒருவர் பலி

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது

நாளை 12 மணி நேர நீர் வெட்டு