உள்நாடுபிராந்தியம்

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் பலி

அம்பாந்தோட்டை – மித்தெனிய பொலிஸ் பிரிவின் ஜுலம்பிட்டிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

சிறுவன் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனை அவதானித்த பெற்றோர் சிறுவனை உடனடியாக கட்டுவான வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் இந்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

புதிய அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க அனுமதி

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு