உள்நாடு

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய பணிப்புரை

(UTV | கொழும்பு) – அண்மையில் ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

வடக்கில் 388 பேருக்கு நியமனங்கள்தேவை அமைச்சரவை அனுமதிகோரி பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!

தவறான விளம்பரம் குறித்து அவசர அறிவித்தல் ஒன்றை வெளியிட்ட தலதா மாளிகை

editor