சூடான செய்திகள் 1

ரத்கம கொலை சம்பவம்-மேலும் இரு பொலிஸார் கைது

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று(06) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

பிரதமருக்கு எதிராக பொலிஸ் தலை​மையகத்தில் முறைபாடு – தேசிய சங்க சம்மேளனம்

உணவுப் பக்கற்றின் விலையை குறைக்க தீர்மானம்