உள்நாடு

ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்: SJBமேற்கொள்ளும் புதிய வியூகம்!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி, சஜித் பிரேமதாச பிரதமரானால் நாட்டிற்கு மிகவும் நல்லது என்றும், ரணில் விக்ரமசிங்கவும் அவரது கட்சியும் ஒரே சித்தாந்தத்தை கொண்டே செயற்படுகின்றார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) குறிப்பிட்டுள்ளார்.

விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்தக் கருத்துதை வெளியிட்டுள்ளார்.

”நாடு இப்போது இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் கூட மாறினால், நாட்டின் போக்கு மாறிவிடும்.

இதனால் சர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும். இலங்கையால் சர்வதேச கடன் மீள்செலுத்துகையில் இருந்து ஒரு படி கூட முன்னேறமுடியாத நிலை ஏற்படும்.

பல்வேறு தேரர்கள் கூறும் பொய்யான கதைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஜனாதிபதியும் மத்திய வங்கியும் இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டுக்கு பலன் கிடைத்துள்ளது.

மேலும், நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டால், அங்கு எந்த கட்சி ஆட்சியை அமைத்தும் பயனில்லை.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி, சஜித் பிரேமதாச பிரதமரானால் நாட்டிற்கு மிகவும் நல்லது.” என்றார்.

Related posts

அசாத் சாலி கைது CID இனால் கைது

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று!

editor