உள்நாடு

ரணில்- சஜித் இணைவு? SJB கூட்டத்தில் முன்மொழிவு

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை இணையச் செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் பெளத்த மத அலுவல்கள் தலைவர் கலாநிதி தனவர்தன் குருகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரேரணைக்கு கட்சியின் சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தானும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும், பிரதமர் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை என்பதாக தெரியவருகின்றது. இதேவேளை, ஜனாதிபதில் ரணில் விகரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவுக்கு இடையி முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

நேற்று (12) ரணில் நடத்திய ஆளுங்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது பொதுஜன பெரமுன தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், ரணிலுக்கு பெரமுன இளம் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது .

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெண்ணின் DNA அறிக்கை வெளியானது

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

மது மாதவ அரவிந்தவ கைது!