முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று (24) இடம்பெற்று வரும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலேயே தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுக் கூடியுள்ளோம்.
எமது அரசியல் கொள்கையில் நாம் கவலையடைந்திருக்கிறோம், சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தும் வருகின்றோம்.
அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
எனவே அவரை விடுப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும், சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.