அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் கடும் எதிர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீிதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் சட்டத்திரணிகளால் நிறைந்து காணப்படுகின்றது.

இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகத நிலையில், சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, “அநுர கோ ஹோம்” என்ற கூச்சல்களோடு அங்கு ஒன்று திரண்டுள்ளவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டனர்.ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரிக்கப்படும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் வருகை தந்து தங்களது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவின் டிஜிட்டல் அடையாள அட்டை நிறுவனத்துடன் – இலங்கை ஒப்பந்தம்!

திரு. நடேசன் இன்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்