உள்நாடு

ரஞ்சன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

(UTV | கொழும்பு) – சிறைச்சாலையிலுள்ள முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (17) காலை 9.30 மணியளவில் ரஞ்சன் ராமநாயக்க குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

2015 – 2019 நல்லாட்சி அரசில் நடைபெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து ஆணைக்குழுவினால் விசாரணை நடாத்தப்படுவதோடு, குறித்த அரசில் இராஜாங்க அமைச்சராக அவர் கடமையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்துக் கட்சி மாநாட்டுக்கான திகதி நிர்ணயம்

சாரதியை சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

SLPP நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்