உள்நாடு

ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பின் 2வது வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்காகஎடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் நான்கு ஆண்டு கால கடூழிய சிறை தண்டனை அனுபவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

டயானா கமகே பொலிஸ் வலைவீச்சுக்கு பின் சற்றுமுன் நீதிமன்றில் ஆஜர்

ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகள் தொடர்பான அறிவித்தல்