உள்நாடு

ரஞ்சனின் இரண்டாவது வழக்கு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி பரிசீலிப்பதற்காக உச்ச நீதிமன்றம் இன்று (09) ஒத்திவைத்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இந்த வழக்கு இன்று (09) உயர்நீதிமன்ற நீதியரசர்களான துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்ற வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவாகும்.

Related posts

அபாயநிலையில் கொழும்பு – GMOA எச்சரிக்கை

சிலாபத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மீட்பு!

editor

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு