உள்நாடு

ரஞ்சனின் குரல் பதிவில் நானும் பழிவாங்கப்பட்டேன் – நாமல்

(UTV|HAMBANTOTA) – கடந்த நல்லாட்சி அரசாங்கத்தைப் போல இந்நாள் அரசின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கைது செய்யும் போது ஊடக சந்திப்புகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஊடகங்க சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அண்மையில் வெளியாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவில் இருந்து அவர் சட்டத்தினை வளைத்துச் செயற்பட்டுள்ளமை தெளிவாக புலனாகின்றது.

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானி மற்றும் சட்டமா திணைக்கள பிரதானியும் சட்டத்தினை தங்களுக்கு ஏற்றாற் போல் மாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

கடந்த அரசாங்கத்தினைப் போல் ஊடக சந்திப்புக்களை நடத்தும் எண்ணம் எமது அரசாங்கத்திற்கு இல்லை என்றும், ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவில் என்னுடைய வாய் கொஞ்சம் நீளம் என்றும், “நாமலை உள்ளே வையுங்கள்’ என்றும் கூறப்பட்டுள்ளதாகவும், இதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் நடைமுறை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சுமார் 50,000 ஐ கடந்த கைதுகள்

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு கடவுச்சீட்டு ஒருநாள் சேவை தொடர்பில் வெளியான தகவல்

editor

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகள்