கேளிக்கை

ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை

(UTV|INDIA)   ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

மேற்படி திருநங்கை ஜீவா இதற்கு முன் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் அறிமுகமானவர். பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

 

 

Related posts

ரஜினிக்கு சரியான ஜோடி நானே…

“அந்த கனவு எப்போது நனவாகும்”?

சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்