உள்நாடு

ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு தீர்வு

ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரங்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மக்கள் போக்குவரத்து சேவை இன்றி அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நீண்ட காலத்தின் பின் பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் ரட்ணம் அமீர் கலந்து கொண்டு குறித்த பேருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.
நீண்ட காலமாக மக்கள் தமது கிராமத்திற்கான பேரூந்து சேவையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தமைக்கமைய, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த தனியார் பேரூந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக க்கட்சியின் கண்டாவளை அமைப்பாளர், பாடசாலையின் அதிபர் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

 வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

தனியார் வகுப்புகள் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை