உள்நாடு

யோஷிதவின் வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளை செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யோஷித ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கும் போது இந்த வழக்கில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை ஆதாரமாக முன்வைத்ததோடு, கணக்காய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் அடங்கிய 26 இறுவெட்டுகள் (CD), 8 USB, வன்தட்டு (Hard Disk), 1 மடிக்கணினி மற்றும் ஒரு CPU ஆகியவற்றை அணுகி ஆய்வு செய்ய அனுமதி கோரினார்.

இந்தக் கோரிக்கைக்கு தாம் ஆட்சேபனைகளை தெரிவிக்க போவதில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதன்படி, இந்த முறைப்பாடு செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நகர்கிறது

உலகின் மிக வேகமாக பரவும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும்

தனது சேவை இனி தேவையில்லை – அரசியலில் இருந்து ஓய்வு – மஹிந்தானந்த

editor