உள்நாடு

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து உரங்களை இறக்கும் பணிகள் 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 10 நாட்களுக்குள் உரம் இறக்கும் பணி முடிக்கப்பட உள்ளது.

லங்கா கொமர்ஷல் உர நிறுவனம் முறையான வேலைத்திட்டத்தை பயன்படுத்தி உர இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உறுதி

“இலங்கை தொடர்பிலான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்”

கொழும்பின் சில பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு