உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி பெண் பலி

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (03) புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன், கொடிகாம பகுதியில் மோதி உயிரிழந்துள்ளார்.

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-பிரதீபன்

Related posts

மலானி பொன்சேகாவின் மறைவு நாட்டிற்கும் திரைப்படத் துறைக்கும் பாரிய இழப்பாகும் – சஜித் பிரேமதாச

editor

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்

‘ஒரு தேசிய அடையாள அட்டையின் கீழ் ஒரு வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்’