உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், குருநகர் கடற்பரப்பில் 17 வயதுடைய சிறுவனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று (21) இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இஸ்ரோ வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் கைது

editor

ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ளூராட்சி வார அங்குரார்ப்பண நிகழ்வு

editor