யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியில், வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் வேனில் பயணித்த நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமாக மொத்தம் ஆறு பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-பிரதீபன்
