உள்நாடு

யாழ்ப்பாணத்தில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு மூன்றரை மாத பெண்குழந்தை உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.

சனிக்கிழமை (20) குழந்தை பால் குடித்த சில மணிநேரங்களில் அசைவின்றி காணப்பட்டுள்ளது. அதன் பின்னர், அந்தக் குழந்தையை போதனா வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டுசென்றபோது, குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழந்தையின் இறப்புக்கு நிமோனியாவே காரணம் என மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

Related posts

பாக்கு நீரினையை  நீந்திக் கடக்க உள்ள  திருகோணமலை  சாஹிரா கல்லூரி மாணவன் !

நேற்று இனங்காணப்பட்ட 106 தொற்றாளர்களின் விபரம்

தேசிய ஐக்கிய முன்னணி தனித்துப் போட்டி