உள்நாடுவிசேட செய்திகள்

யாழ்ப்பாண பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளை (21) பாடசாலை நாளில் நடைபெறுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளருக்கு உடனடியாக நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்குமாறு பணித்துள்ளார்.

Related posts

IMF ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு

கணிசமாகக் குறைவடையும் நாட்டின் சனத்தொகை!

கோள் மண்டல காட்சி கூடம் செவ்வாயன்று திறப்பு