வகைப்படுத்தப்படாத

யாழ்.மாவட்டத்தில் பூரண கடையடைப்பு போராட்டம்..

(UDHAYAM, COLOMBO) – காணாமல் ஆக்கப்பட்டவர்கள், படையினருடைய நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், அரச நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க கோரி யாழ்.மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த மற்றய கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், நகர பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதேபோல் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளது.

இதேபோல் பேருந்து சேவைகள் இல்லாமையினால் அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்களில் அலுவலர்கள் குறைவாகவே சென்றுள்ளதுடன், வைத்தியசாலைகளிலும் மக்கள் குறைவாகவே காணப்படுகின்றனர்.

Related posts

டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்கு எச்சரிக்கை

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் இறுதி தீர்மானம்

Landslides destroy 10 shops in Ginigathhena; one reported missing