வகைப்படுத்தப்படாத

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

(UDHAYAM, COLOMBO) – பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

இன்று அதிகாலை முதல் யாழ் மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை நிரப்ப மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த நிலமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் நிலையங்களின் தகவல்கள் மூலம் அவதானிக்க முடிவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Related posts

Sir Kim Darroch: UK ambassador to US resigns in Trump leaks row

இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் கைது

කොටස් වෙළදපොළේ මිල දර්ශක ඉහළට.