சூடான செய்திகள் 1

யாழ் மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UTVNEWS|COLOMBO) – யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(07) நாட்டி வைத்தார்.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா யாழ்.மாநகர முதல்வர் இ . ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த . சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மேலதிக பஸ் சேவைகள்

ஜனாதிபதி -பசிலுக்கிடையில் முக்கிய பேச்சு