உள்நாடுபிராந்தியம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்த மண், பண்பாட்டு இனப் படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

கொரோனா : 8,000ஐ கடந்தது

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேறினர்!

editor

தொடங்கொடை கொலைச் சம்பவம் : முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது!