உள்நாடு

யாழில் துப்பாக்கிச் சூடு; இளைஞன் படுகாயம்

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

“மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.

அவரது கையில் கல்லடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இராணுவத்தினர் மறித்தனர். எனினும் அதனை மீறி சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.” என ஆரம்ப விசாரணைகளில் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

வீடியோ – செம்மணியில் சிறு குழந்தையின் எலும்புக்கூடு பையுடன் மீட்பு – இதுவரை செம்மணியில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்

editor

‘நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்த ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’

மின்கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்த அறிவிப்பு