உள்நாடு

யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று மீண்டும் திறக்க நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், இன்று பிற்பகல் 2:00 மணி முதல் அந்த வீதிகள் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக யால தேசிய பூங்காவின் வீதி அமைப்புக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதற்கும், அதன் மூலம் அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கும், மார்ச் 01 ஆம் திகதி முதல் யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், மழை காரணமாக சேதமடையக்கூடிய வீதிகள் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை யால தேசிய பூங்காவில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து இந்த நிலைமையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்