உள்நாடு

யானைகளின் உயிரிழப்பை தடுக்க புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள்

புதிய அரசாங்கத்தினால் கிழக்கு புகையிரத மார்க்கங்களில் இன்று முதல் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள் முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இதற்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் காட்டு யானைகளின் வளத்தை பாதுகாப்பதுக்காக இன்று முதல் ரயில்வே திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திற்கான புதிய ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்கு அமைய இன்று காலை மட்டக்களப்பில் இருந்து பாடுமீன் கடு கதி புகையிரதம் 6:15 க்கு புறப்பட்டு கொழும்பை பிற்பகல் 3:30 க்கு சென்றடைய உள்ளது

மட்டக்களப்பில் இருந்து புலத்தசி புகையிறத சேவை நள்ளிரவு 1.30 புறப்பட்டு கொழும்பை மறுநாள் காலை 10 மணியளவில் சென்றடையும்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான புலத்தசி பிற்பகல் 3:15க்கு புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் மட்டக்களப்பை வந்தடையுள்ளது

இதுவரை காலமும் 7 மணிக்கு புறப்பட்ட மட்டக்களப்புக்கான பாடுமீன் கடு கதி புகையிரதம் இன்றிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8:30 அளவில் மட்டக்களப்பை வந்தடைய உள்ளது

ஏனைய இணைப்பு சேவைகளில் எது வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவே

புகையிறதத்தில் பயணிக்கும் பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்படுமாறு புகையிறத திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது

Related posts

ஒன் அரைவல் விசா இரத்து

பட்டாசுக் காயங்களுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை

மேலும் 17 கடற்படையினர் பூரண குணம்