உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை அதிபர் பலி

கந்தேகெதர – அலுகொல்ல வீதியில் சார்ணியா தோட்ட கொல்லுமண்டி பிரிவில் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் வியலுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 59 வயதுடைய அதிபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகானுக்குள் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பாடசாலை அதிபர் உயிரிழந்துள்ளார்.

இவர் பதுளையில் இருந்து பாடசாலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையமாட்டோம் – மஹிந்த

editor

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’

மனு நிராகரிப்பு