உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதி கோர விபத்து – 16 வயது மாணவர்கள் இருவர் பலி

நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றுடன் குறித்த மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்று காலதிவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கைக்கு எதிரான எம்.சி.சி உடன்படிக்கையை கிழித்தெறிய தயார் [VIDEO]

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி அநுர

editor

இணைந்து போட்டியிட்டதால் சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

editor