உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

மோட்டார் சைக்கிளில் ஊடாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை விற்பனைக்கு கொண்டு சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு மோட்டார் சைக்கிளையும் காரைதீவு பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (05) சனிக்கிழமை இரவு (06.00) மணியளவில் நடைபெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (05) சனிக்கிழமை இரவு (06.00) மணியளவில் காரைதீவு பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

காரைதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை நிறுத்தி மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது 23 வயது மதிக்கத்தக்க ஏறாவூர் 06 பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 15 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தநாராயணவின் வழிகாட்டுதலில் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜெகத் தலைமையிலான குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

இலங்கையில் எமிரேட்ஸ் விமான சேவைகள் அதிகரிப்பு

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்