வகைப்படுத்தப்படாத

மோடியை நாளை சந்திக்கிறார் பிரதமர் ரணில்

(UTV|COLOMBO)-இந்திய மற்றும் இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளையதினம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீனவர்கள் மட்ட மற்றும் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் பலதடவைகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் இதற்கு இன்னும் இறுதியான தீர்வு காணப்படவில்லை.
குறிப்பாக இலங்கை கடற்பரப்பில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்கள் அனுமதி கோருகின்றமையை இலங்கை மறுத்து வருகிறது.
இவ்வாறான நிலையில் இது குறித்து நாளைய பேச்சுவார்த்தையின் போது முக்கியமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

UAE leaders perform funeral prayers for Sharjah Ruler’s son

More rain in Sri Lanka likely