சூடான செய்திகள் 1

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO) இன்று காலை மொரட்டுவை – கட்டுபெத்த ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை மொரட்டுவை காவல்துறை மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து அணைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலால் அந்த கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

கடல் கொந்தளிப்பு

உதவும் கரங்கள் அமைப்பு விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

உதயங்க வீரதுங்க கைது