உள்நாடு

மொரட்டுவ பல்கலை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளராக வைத்தியர் ஷர்மி ஹஸன் நியமனம்!

சிசு நல விசேட வைத்திய நிபுணர் ஷர்மி ஹஸன், மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிசு நல மற்றும் சிறு பிள்ளை மருத்துவ சிரேஷ்ட விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விரிவுரையாளராக கடமையாற்றுவதற்கு மேலதிகமாக இவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் சிசு நல விசேட வைத்திய நிபுணராகவும் வைத்தியராகவும் கடமையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரியான ஹஸன், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சிறுபிள்ளை மருத்துவம் தொடர்பான பட்டப் பின்படிப்பு (DCH) மற்றும் முதுமானி (MD Paediatrics) ஆகிய கற்கை நெறிகளை நிறைவு செய்தவராவார்.

பொத்துவில் மத்திய கல்லூரி மற்றும் கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான ஷர்மி ஹஸன், இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிசு நல விசேட வைத்திய நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு

மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு