வகைப்படுத்தப்படாத

மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 03 நாட்கள் துக்க தினம்..

(UTVNEWS | MOZAMBIQUE) – மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக 03 நாட்கள் துக்க தினத்தை அனுஷ்டிக்க அந்நாடு தீர்மானித்துள்ளது.

இதன்படி 20,21 மற்றும் 22 ஆகிய தினங்களில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

மொசாம்பிக்கின் போர்ட் சிட்டி பெய்ராவில் கடந்த வியாழக்கிழமை 170 கே.பி.எச் வேகத்தில் வீசிய இடாய் சூறாவளி மொசாம்பிக் உட்பட சிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளை பாதித்திருந்த நிலையில் குறித்த அனர்த்தத்தில் மொசாம்பிக்கில் 1000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடாய் சூறாவளியினால் சுமார் 2.6 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயுதங்களுடன் 11 பேர் கைது

Wellampitiya copper factory worker further remanded

තලවකැලේ නගරයේ වෙළඳසැල් හදිසි පරීක්‍ෂාවකට