உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து பணியாற்றுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

130 பயணிகளுடன் வந்த ஶ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்பட்ட நிலை