உள்நாடு

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய மேலும் 16 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலத்தினுள் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 940 அன்டிஜன் பரிசோதனைகளில் 16 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவர்களுடன் நெருங்கி பயணித்ததாக கூறப்படும் 195 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை மொத்தம் 572 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தில் கொவிட்-19 வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகின்றமையானால், இங்கிருந்து செல்லும் நபர்கள் ஊடாக வெளி பிரதேசங்களிலும் வைரஸ் பரவலடைய வாய்ப்புள்ளது என்பதனால் , அதனை தடுப்பதற்காக மேல்மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்பவர்களை இலக்கு வைத்து , 11 இடங்களில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகன்றன.

கடந்த 18 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கமைய, இதுவரையில் 11,926 பேருக்கு இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது 90 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்