வகைப்படுத்தப்படாத

மேல்கொத்மலை ஆற்றில் பாய்ந்து மூச்சக்ரவண்டி விபத்து இருவர் படுகாயம்

(UTV|COLOMBO)-தலவாக்கலை பொலிஸ்    மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஹெலிரூட் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த முச்சக்கரவண்டி 26.11.2017 இரவு 9 மணிளவில் பூ ண்டுலோயா தலவாக்கலை பிரதான வீதியிலிருந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்து கொத்மலை ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்
கண்டி வத்தேகம பிரதேசத்திலிருந்து  ஹெலிரூட் பகுதிக்கு மரணவிடு ஒன்றுக்கு வந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகீயுள்ளனர்
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக. நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் .
மு.இராமசந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Boris Johnson’s new-look cabinet meets for first time

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

உங்கள் அழகை பாதுகாக்க சில டிப்ஸ்…