உள்நாடு

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று (26) முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கையில் 737 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 3021 மோட்டார் சைக்கிள் மற்றும் 2493 முச்சக்கரவண்டிகள் சோதனையிடப்பட்டுள்ளதுடன், 7352 பேரும் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாத 1749 பேருக்கு பொலிஸரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கனேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரி – படம் வௌியானது

editor

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

தேங்காய் பறிக்க தோட்டத்திற்குள் நுழைந்தவர் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor