சூடான செய்திகள் 1

மேல் மாகாண சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித மரியாள் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்னும், போதுமான வசதிகள் இல்லாத சர்வதேச பாடசாலைகள், தம்மைச் சீராக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவற்றின் அனுமதி இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

விமலுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

பேருவளை படகு விபத்தில் நால்வர் பலி – விசாரணைகள் ஆரம்பம்

அரசுக்கு இனி ஆதரவு வழங்க மாட்டேன் – அர்ச்சுனா எம்.பி | வீடியோ

editor