உள்நாடு

மேலும் சில குழுவினருக்கு PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – வெலிகட சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 294 பேருக்கு இன்று(09) பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து சேனபுர தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தரப்பினரும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டவர்களுக்கே இவ்வாறு பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகட சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 326 பேர் இதுவரையில் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து IMF இனது உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை

இன்று அமைச்சரவையில் சிறிய மாற்றம்!