உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

 

(UTV | கொழும்பு) – மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகிய மேலும் 08 பேருக்கும் மற்றும் குறித்த தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கும் கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இதற்கமைய, மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1052 ஆக அதிகரித்துள்ளது

————————-[UPDATE]

மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1044 ஆக ஆதிகரித்துள்ளது.

Related posts

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3வது தடுப்பூசி

பங்களாதேஷ் கடற்படை போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

editor

தெஹியத்தகண்டி, கல்முனை உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறாது

editor