சூடான செய்திகள் 1

மெரேயா நுரரெலியா வீதியில் லொறி விபத்து போக்குவரத்து முற்றாக தடை

(UTV|COLOMBO)-லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. டயகம மெரேயா வழியான நுவரெலியா பிரதான வீதியில் லொறியொன்று பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்  அவ் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது

06.04.2018 காலை 6 மணியளவிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
மெரேயா பகுதியிருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியே டெஸ்போட் பகுதியில் பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளமையினால் குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும்  குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை கைது செய்வதாக அறிவிப்பு?

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

சினிமா பாணியில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவர் கைது