உலகம்

மெக்ஸிகோவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு

(UTV|கொழும்பு)- மெக்சிகோவில் இன்று(01) முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமான பணிகள் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி என அனைத்தும் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழலில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 90,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9,930 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

மலேசிய முன்னாள் பிரதமர் குற்றவாளி என நிரூபணம்

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது