உலகம்

மெக்சிக்கோவில் வெள்ளம் – பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு

மெக்சிக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏராளமான முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான, மலைப் பகுதிகளின் பாதைகள் நிலச்சரிவில் முழுவதுமாக முடங்கியுள்ளதால், அங்கு சிக்கியவர்களை மீட்பது கடும் சவாலானதாக மாறியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் பாதிப்புகளில் இதுவரை 76 பேர் பலியானதாகவும், 27 பேர் மாயமானதாகவும், மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது.

இதுபற்றி, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதுடன், இணைப்பு வழிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு 10 பில்லியன் பெசோஸ் நிவாரண நிதியை அளிப்பதாகவும், ஜனாதிபதி ஷீன்பாம் அறிவித்துள்ளார்.

-பி.பி.சி

Related posts

கொரோனாவினால் உயிரிழந்தோர் இரண்டாயிரத்தையும் தாண்டியது

ஜனாதிபதி பதவியை தக்கவைத்தார் ஆசாத்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் – 50,000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்

editor