வகைப்படுத்தப்படாத

மெக்சிகோ தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Two drug traffickers held by Navy in Hambantota

உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவிஉயர்வு

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை