உலகம்

மெக்சிகோ சிறை கலவரத்தில் 16 கைதிகள் பலி

(UTV|MEXICO) – மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 16 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோ நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் உள்ளனர்.

இந்நிலையில், மெக்சிகோ நாட்டின் வடக்கில் ஜகாடெகாஸ் நகரிலுள்ள செரெரெஸ்கோ பகுதியில் அமைந்துள்ள சிறையில் கைதிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இதில் 16 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் ஆரம்பம்

புதிய பாப்பரசராக ரோபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

editor

ஓமான் நாட்டின் மன்னன் காலமானார்