உலகம்

மூன்று வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி

(UTV |  சீனா) – உலக நாடுகள் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் சீனா 3 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பல நாடுகளில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரிட்டன், அமெரிக்க நாடுகள் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளன.

இந்நிலையில் சீனா அனைத்து நாடுகளுக்கும் முன்னதாக 3 வயது முதலான அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள், சிறார்கள் செலுத்தி கொள்வதற்கென்றே சீனாவேக் என்ற புதிய தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை சோதனை செய்ததில் நம்பகமானது என சீனா அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பும் அங்கீகரித்துள்ளது. இந்த தடுப்பூசி விரைவில் சீனாவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பலஸ்தீனுக்கான உலக நாடுகளின் ஆதரவு: சிக்கலில் இஸ்ரேல் பிரதமர்

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கோட்டாபயவுக்கு நான் வீடு வழங்கவில்லை , நான் எனது சொந்த வீட்டிலேயே வசிக்கிறேன் – அலி சப்ரி